Monday, 7 January 2019

Spoken English 1

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க பகுதி 1

நான் இந்த பதிவில் கூறியது போல என் பக்கத்தில் நான் கற்றவை பற்றி தொடர்ந்து எழுதுவேன். நடுவில் Spoken English மற்றும் Resume making பற்றியும்
எழுத ஆசை. அந்த வரிசையில் என் முதல் பதிவு இதோ...



அழகாய் ஆங்கிலம் பேச முதலில் நாம் வழக்கமாகச் செய்யும் தவறுகளை திருத்தணும். ஒரு கல்லில் தேவையில்லாத பகுதிகளை நீக்கினால் மிச்சமிருப்பது அழகான்சிலை. இதே லாஜிக்கில் நாம் செய்யும் எல்லா தவறுகளையும் நீக்கினால், நான் பேசுவது அழகான (சரியான) ஆங்கிலம் ஆகி விடும்.



இந்த பதிவில் சில தவறுகளைப்பற்றி பார்க்கலாம்.



1. First First : எனக்கு தெரிஞ்சு தமிழர்கள் மட்டுமே இந்த தவறை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் First மட்டுமே உண்டு, first first கிடையாது.

தமிழில் முதன்முதலில் என்று உண்டு. எதையுமே அளவோடு சொல்ல நமக்குத் தெரியாது, எல்லாத்தையும் superlative ஆக சொல்ல வேண்டும் .

முதலில் என்றாலும் முதன்முதலில் என்றாலும் ஒரே அர்த்தம்தான். முதன்முதலில் என்று சொல்வதில் தவறு இல்லை, first first என்பதை first

என்று சொல்லிப் பழகணும்.



2. On the way ல இருக்கேன் - இதுவும் நாம் செய்யும் (சொல்லும்) ஒரு Common mistake. Iam on the way ன்னு முழுசா ஆங்கிலத்தில் சொல்லலாம்

அல்லது வந்துகிட்டே இருக்கேன்னு பேச்சுத்தமிழ்ல சொல்லலாம், கலந்துதான் பேசுவேன்னு முடிவெடுத்துட்டா way ல இருக்கேன்னு சொல்லலாம்.



3. இந்த verb "ing" ங்க நாம விடவே மாட்டோம், எல்லாத்துக்கூடவும் சேத்துக்குவோம். ஒங்க வீடு எங்க இருக்குன்னு கேக்கறதுக்கு நாம கேக்குறது “Where are you

staying" - இது தவறு. Where do you live or where do you stay ன்னு கேக்கணும். இதே மாதிரி "where are you working?" இது தவறு

"what do you do for living" அல்லது "where do you work" என்றுதான் கேக்கணும். ரொம்ப Grammer க்கு உள்ள நுழையாம சொல்லணும்முன்னா

ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc. 



4. Photocopy எடுப்பதை Xerox எடுப்பதாகவே சொல்லிப் பழகிவிட்டோம். xerox என்பது ஒரு நிறுவனம், அவர்களும் Photocopy இயந்திரங்கள் 

தயாரிக்கின்றனர், அவர்கள் மட்டுமே அல்ல. இதே போலத்தான் Jeep, இதுவும் ஒரு நிறுவனமே, car/ SUV போல ஒரு வகையான வாகனம் அல்ல.



5.Resume : இதை உச்சரிப்பதில்தான் தகராறே. இதை ”ரெஸ்யூமே” என்றுதான் சொல்ல வேண்டும், நம்மில் பலர் “ரெஸ்யும்”என்றும் ”ரெஷ்யும்”/”ரெஷ்யூமே”

(முக்கியமாக தெலுங்குக்காரர்கள் இப்படி சொல்வார்கள்) என்றும் உச்சரிக்கிறோம்.



நான் எழுதும் விசா பற்றிய பதிவுகளுக்கு பெரிசா ஒண்ணும் ரீச் இல்ல, அதுகாக நான் கவலப்படல, அதே மாதிரி spoken english / Resume பத்தியும் 

எழுத ஆசை. நாம எழுதுறது நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம். உங்க கருத்துக்களை (முக்கியமா துளசி டீச்சர்) எதிர்பார்க்கிறேன்.



படித்ததில் பிடித்தது : Don't worry about world coming to an end today, it is already tomorrow in Australia 

(படிச்சா அனுபவிக்கணும் ஆராயப்படாது)

No comments:

Post a Comment