Monday, 7 January 2019

Spoken English 4

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க: பகுதி 4

ரொம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னர் எழுதின இத்தொடரின் சில இடுகைகள்:

வழக்கம் போல நாம பேசுற ஆங்கிலத்தில் இருக்கும் தவறுகளை உணர்ந்து அவற்றைத் திருத்திக் கொண்டாலே ஓரளவுக்கு சரியா பேசலாம். இந்த பகுதியில் தொலைபேசியில் பேசும் போது நம்மில் பலர் வழக்கமா செய்யுற தவறுகளையும் திருத்தங்களையும் பாக்கலாம். 


தொலைபேசியில் பேசுறதுன்னு சொன்னதும் நாலு முக்கிய விசயங்கள் ஞாபகத்துக்கு வருது, அவை

1. ஒருவரை கைப்பேசியில் கூப்பிடுவதற்கு முன்னர் Land Line ல கூப்பிடணும், அதில் அவருடன் பேச முடியாத பட்சத்தில் கைப்பேசியில் கூப்பிடலாம்.

2. நீங்க ஒருவரை அவரின் கைப்பேசியில் கூப்பிடும் போது அவர் பிஸியாக இருக்கலாம், முதலில் - இன்னார் பேசறேன், இந்த விசயத்துக்காக கூப்பிட்டேன், ரெண்டு நிமிஷம் பேசலாமா என்று கேட்டு விட்டுத் தொடரவும்.

3. ஒருத்தருக்கு போன் பண்ணிட்டு “யார் பேசறதுன்னு கண்டுபிடி பாக்கலாம்” என்று எரிச்சலைக் கிளப்பாதீர்கள், குரலைக் கேட்டவுடன் கண்டுபிடிக்க நீங்க எம் ஜி யாரோ கருணாநிதியோ அல்ல.

4. வீட்ல போன் எடுக்குறதை விட அலுவலகத்தில் போன் எடுக்கும் போது அதிக கவனமா இருக்கணும். You are the face of your organization for the caller. நீங்க போன் அட்டெண்ட் செய்யுற விதத்தை வைத்துத்தான் நீங்க வேலை செய்யும் நிறுவனத்தையே அடுத்த முனையில் இருப்பவர் எடை போடுவார் எனபதை நினைவில் வைக்கவும். Official Greeting பல விதமா செய்யலாம், பல சரியான வாக்கியங்களில் இதுவும் ஒன்று, இதை சரியான tone இல் சொன்னால் போதும்


Good morning, Thank you for calling Kokran Mekran company, My name is Dharshan, How can I help you today?

Telephone Etiquette சம்பந்தமா நாலு விசயங்களைத் தொடர்ந்து தொலைபேசியில் தவிர்க்க வேண்டிய ஆங்கிலத் தவறுகளில் சிலவற்றைப் பார்க்கலாம். 

This is Dharshan this side என்று சொல்வதைத் தவிர்க்கலாம் My name is Dharshan என்று சொல்வதே அழகா இருக்கும்

What is your good name - தவறு May I have your name? - இதுவே சரி

You will get it today itself / I will do that today itself என்று சொல்வதை விடுத்து You'll get it by the end of the day today என்று சொல்லலாம்

I will just come to your room எல்லாத்துக்கும் ஜஸ்ட் உபயோகப்படுத்துவதை விட்டு I will be with you in minuteஎன்று சொல்வதே சரி.

Hold on மிக அதிக அளவில் தவறாக உபயோகப் படுத்தப்படும் ஒரு பதம் - இதுக்கு அர்த்தம் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்குறதைத் தொடர்ந்து செய்யுங்க என்பதே ஆகும். அடுத்த முனையில் பேசுபவரை இதைச் சொல்வது தவறு, இதுக்கு பதிலா Please be on the line or phone, I will check that for you or I will check if Mr. X is available at office என்று சொல்லலாம். 

I will just be back என்று சொல்வதை விட I will be back in just a minute or few minutes என்று சொல்லுங்க, அழகா இருக்கும்.

Revert back ரிவெர்ட்டுக்கு அடுத்து Back அவசியமில்லைRevert என்பதே போதுமானது.

Mr. X is out of station now, do you want to say something for him? என்று கூறாமல் Mr. X is not in town, he will be back on .., would you like to leave a message for him? என்று சொல்லலாம்
I am not getting you என்பதை விட I'm Sorry, I didn't understand that (or) I'm Sorry, Can you say that againஎன்பது அழகாக இருக்கும். மறுபடியும் அலுவலக போன் சம்பந்தமாக ஒரு டிப். உரையாடல் முடிந்த பின்னர் இப்படிச் சொன்னால் அழகா இருக்கும்.

Is there anything else you need from Kokran Mekran today? Thanks for calling us, have a wonderful day.
அழகா இருக்குன்னு அலங்கார வாக்கியங்களை எல்லா இடங்களிலும் சொன்னா என்ன ஆகும்னு இந்த ஜோக்கைப் படித்து புரிஞ்சிக்கோங்க:


நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை தெரிவு செய்த மேனேஜர், சம்பளத்தை முடிவு செய்ய எண்ணினார். அந்தப் பெண்ணிடமே எவ்வளவு சம்பளம் எதிர் பாக்கறீங்கன்னு கேட்டார்.

அந்த பெண் மாதத்துக்கு பத்தாயிரம் என்று சொன்னாள். உடனே அழகா பதில் சொல்வதாக எண்ணி மேனேஜர் சொன்னார் - “With Pleasure". அதுக்கு உடனே அந்தப் பெண் அப்படின்னா இருபதாயிரமா கொடுத்திடுங்க என்றாள். புரிஞ்சவங்க சிரிச்சிக்கோங்க..

Labels: Spoken English

No comments:

Post a Comment