அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க - பகுதி 5
என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குறிய Dharshan வணக்கத்துடனும் மொக்கை போட அடுத்த போஸ்டுடன் வந்து விட்டேன்
இந்த பகுதியில் singlular/Plural Form இல்லாத வார்த்தைகள் பற்றி எழுத நெனச்சிருந்தேன், ஆனா அவை பற்றி எழுதிக் கொடுக்க மண்டபத்தில ஆளில்லாத காரணத்தினால், இந்த பதிவில் உபயோகத்தில் இருக்கும் சில தவறான / ஆங்கிலத்தில் இல்லாத/Native Speakers of Englishஉபயோகிக்காத வார்த்தைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
பல பேரின் பேச்சிலும் எழுத்திலும் அகராதியில் இல்லாத வார்த்தைகளைப் பார்த்திருக்கிறேன், English has adapted many words / Phrases for other languages ஆனா First Firstமாதிரி தப்பெல்லாம் adaptability யில் வராது. அப்படி சில வார்த்தைகளையும் அவற்றுக்கான சரியான வார்த்தைகளையும் இப்போ பாக்கலாம்.
1. Co-Brother : சகோதரிகளை மணந்த இரண்டுஆண்களின் உறவு முறையை சொல்ல இந்த வார்த்தை தென்னிந்தியாவில் மட்டும் பயன்படுத்தப் படுகிறது. இந்த மாதிரி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. Brother in Law என்பதே சரி..
2. Cousin Brother/Sister : உறவு முறையில் இன்னொரு தவறான வார்த்தை.Cousin is a relative with whom one shares a common ancestor. அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகளுக்கு பிறந்தவர்கள் அனைவரும் இடையில் இருக்கும் உறவு முறை Cousin. Aunt எவ்வளவுதான் பாசம் காட்டினாலும் Aunt Mother ஆக முடியாது. அதே போல, எவ்வளவுதான் சகோதரத்துவம் பேணினாலும் Cousin அண்ணனாவோ தங்கையாவோ ஆக முடியாது. He/She is my Cousin என்றுதான் சொல்லவேண்டும்.
3. Prepone : மிக அதிகமா உபயோகப் படுத்தப் படும் இன்னோரு தவறான வார்ததை. ஒரு காரியம் நடக்க குறித்த நேரத்தில் நடக்காமல் தள்ளிபோனால் அது Postponement, அதுவே குறித்த நேரத்துக்கு முன்னரே நடந்தா அது Advancement. Prepone என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. I advanced my trip to USA by a week என்பதே சரி..
4. Roundtana : இந்த மாதிரி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இல்லாததால்,ஸ்பெல்லிங் சரியா தப்பான்னு கூடத் தெரியல. "Round About" எப்படி தமிழகத்தில் மட்டும் மருவி ரவுண்டானா ஆச்சுன்னு தெரியல. இனிமேலாவது Round About என்று சொல்லிப் பழகுவோம்.
5. Eversilver : இப்படி ஒரு உலோகம் இருந்தால் அது வெள்ளியை (Silver) விட விலை உயர்ந்த்தாக இருக்க வேண்டும், ஏன்னா அதுதான் Eversilver ஆச்சே.. Stainless Steel என்பதே இதன் சரியான பெயர். இது எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் பேசும் போது எவர்சில்வர் டம்ப்ளர் என்றுதான் சொல்கிறோம்.
அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லாம, இனிமேலாவது இந்த மாதிரி ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தைகளை உபயோகிப்பதை நிறுத்துவோம்.
Labels: Spoken English
இடுகையின் கடைசியில் ABC goes to office everyday to read and write blogs,isn't it? யில் இருக்கும் தவறு என்னன்னு கேட்டிருந்தேன், ABC goes to office everyday to read and write blogs,doesn't she? என்று இருக்க வேண்டுமென்று சரியாகச் சொல்லியிருந்தார்கள். இதற்கு பெயர் Question Tag, இது பற்றி இந்தப் பதிவில் பாக்கலாம்.
Question Tag :
ஒரு Positive Statement அல்லது Negative Statement ஐ (பொதுவாக Declarative Statement) கேள்வியாக மாத்துவதற்கு உபயோகப் படுத்தப் படுகிறது. A brief question that follows a statement in which the person asking it seeking confirmation or denial of the statement.
ரொம்ப குழப்பமா இருக்கா, இப்போ ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்க : You did not go to office yesterday and watched cricket match, Isn't it என்று பலபேர் சொல்லக் கேட்டிருப்பீங்க, இதில் வரும் “Is not it" என்பது தான் Question tag.
நாம் சொன்னதை சரி பார்க்கவும், கேட்பவரது Acceptance / confiramation ஐ பெறுவதற்கும் இது பயன்படுகிறது. ஒருவரிடம் வேலை
செய்யவோ அலலது உதவி கேக்கும் போதோ polite ஆ கேக்கவும் இது பயன்படும்.
Auxiliary, Negation,Intonation, Emphasis ன்னு இதில் பல விஷயங்கள் இருக்கு. இதயெல்லாம் விவரமா சொன்னா wiki பக்கத்த படிக்கறா மாதிரி இருக்கும். வாக்கியம் அமைப்பது எல்லாத்துக்கும் ஒரே மாதிரிதான், அத மட்டும் இப்போ பாப்போம். மேலதிக தகவல் தேவைப்படுவோர் விக்கி வாத்தியாரைக்.
ஒரு Statement ஐ சொல்லிவிட்டு Question tag சேக்கணும்னா, அந்த ஸ்டேட்மெண்டில் இருக்கும் is/was/does/did/do மட்டும் மாத்தி tag question அமைக்க வேண்டும்.
Examples of Positive statements
- He is Smart, Isn't he? (இங்கு அந்த He க்கு Dharshan என பொருள் கொள்க ஹி ஹி)
- It was a great match , wasn't it?
- He did a great job, didn't he?
- ABC goes to office (ABC does go to office), doesn't she
- You're coming, aren't you?
- I told you do this yesterday, Didn't I?
இதுக்கெல்லாம் Isn't it ன்னு ஒரே Question Tag உபயோகிப்பதை பார்த்திருப்பீர்களே. வாக்கியத்தில் உள்ள is/was/ are/ did/ does/ do
உடன் not ஐ தேர்ந்தெடுத்து I/ You/ He / She இவற்றில் பொருத்தமானதை சேர்த்து பேசிப்பழகுங்கள்.
இப்போ சில Negative Statement உதாரணங்கள்
- He is not an Indian, Is he?
- It wasn't a great movie, was it?
- You didn't do this, did you?
- Your wife doesn't need your help in cooking, does she?
- Sneha, you don't wear swimsuits,do you?
- They were not part the team, were they?
வித்தியாசம் புரியுதா? இந்த வாக்கியங்களில் இருக்கும் not ஐ எடுத்துவிட்டு Question Tag
No comments:
Post a Comment