இந்தப் பகுதியில் மேலும் சில தவிர்க்க வேண்டிய தவறுகளைப் பற்றிப் பார்க்கலாம்.
1. Mister (Mr): இரண்டாம் பாகத்தைப் படித்து விட்டு டுபுக்கு ரங்கா தனிமடலிலும் Floraipuyal மணிவண்ணன் பின்னூட்டத்திலும் இந்த mister பத்தி சொன்னார்கள். இந்த வார்த்தையை பாகம் 3க்கான வரைவில் வைத்திருந்தேன். இப்போ இதைப் பற்றி:இத ஆங்கிலப் பிழைன்னு சொல்றத விட சமூகப் பிழைன்னு சொல்றது சரின்னு நினைக்கிறேன். இந்தியாவில் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட குமார் சார் என்றோ Mr.Kumar (first name) சொல்வது வழக்கம். முதலாவது தேவையில்லை, இரண்டாவது தவறு.Sir என்பது ஒரு பட்டம், எல்லாரையும் அப்படி கூப்பிடத் தேவையில்லை. Mister விஷயத்துக்கு வருவோம். மிஸ்டரை Surname அல்லது Last name உடன் தான் உபயோகிக்க வேண்டும். Hello சச்சின் என்றோ Hello Mr. Tendulkar என்றோதான் கூறுவது வழக்கம். Hello Mr. Sachin என்று கூறுவது மரபல்ல. நான் ஏன் முதல்ல சமூகப்பிழைன்னு சொன்னேன்னா தமிழகத்தில் சாதியை ஒழிக்கிறேங்கற பேர்ல சர்நேமை ஒழிச்சிட்டோம். சர்நேம் ஒழிஞ்சிருச்சு, சாதி இன்னும் ஒழியல. என்னை Mr. நாரயணன் என்றுஅழைக்கும் போது தலையில் அடித்துக்கொள்வேன், என்ன செய்வது தவறு என்னிடம் இருக்கு அழைப்பவரிடம் இல்ல.
2. வால்பையனுக்கு பிடித்த சப்ஜெக்ட் : Hard Drink : முதல்ல விக்கி வாத்யார் என்ன சொல்றார்ன்னு பாப்போம் An alcoholic beverage is a drink that contains ethanol (commonly called alcohol). Alcoholic beverages are divided into three general classes: beers, wines, and spirits. நம்மாளுங்க பீரை Cold எனவும் விஸ்கி / பிராந்தி இன்ன பிற வகைகளை Hot Drink னும் பிரிச்சிட்டாங்க. விக்கி வாத்யாருக்கு Hot Drink னாஎன்னன்னே புரியால. இனிமே விஸ்கிய Hot drink ன்னு சொல்லாம Hard Drink ன்னு சொல்லுவீங்கதானே..
3. How Can I go to ....: ஒரு எடத்துக்கு வழி கேக்கும் போது பலர் கேட்பது இப்படித்தான். உத (உண்மைத்தமிழன் இல்லீங்க உதாரணம்) Hattonல் இருந்து colomboku போக யாராவது என்னிடம் How can I go to colombo ன்னு கேட்டா You can go either by walk or by bus or you can take an auto இல்ல உருண்டுகிட்டும் போகலமுன்னு சொல்வேன், ஏன்னா அவர் கேட்டது அதுதான். How can I get there என்று கேட்டுப் பழகுங்கள்.
4. பள்ளியில் கேள்வியை மாத்தி பதில் சொல்ற டெக்னிக்கை டீச்சர் கத்துக் கொடுத்தாங்க (What is your name ? My name is ..), கேள்விய Statement ஆ மாத்துறத யார் சொல்லிக் குடுத்தாங்கன்னு தெரியல. Will you come to Office tomorrow? ன்னு கேக்கறதுக்கு You will come to office tomorrow NO ன்னு கேக்கக் கூடாது. You will give this to me No, You agree with me no எல்லாம் இதே மாதிரி தான். இதே போல பேசும் போது ஒவ்வொரு வாக்கியத்துக்கும் You know, like, all that stuff போடுவதைத் தவிர்க்க வேண்டும். Well you know that restaurant was good, you know I was there last evening (yesterday evening இல்ல), like it was amazing food, like I had idly and all that stuff. like the waitress was beautiful like it was you know great evening. படிக்கும் போது எவ்வளவு எரிச்சலா இருக்கு, இப்படி பேசினா கேக்கறவங்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும்.
5. Hotel க்கும் Restaurant க்கும் உள்ள வித்தியாசத்த தெரிஞ்சிக்கறது முக்கியம். தங்குவதற்கு அறைகள் இருந்தால் மட்டுமே அது Hotel. சாப்பாடு / Drinks மட்டுமே கிடைக்கும் இடம் Restaurant.உடுப்பி ஹோட்டல் என்பது தவறு. ஹோட்டல் சரவண பவனுக்கு சென்று ரூம் கேட்டு அடிவாங்கினால் நான் பொருப்பல்ல....
No comments:
Post a Comment